• Jan 19 2025

கதாநாயகன் ஆனார் ‘மாஸ்டர்’ மகேந்திரன்.. முதல் படத்தை தொடங்கி வைத்த 4 இயக்குநர்கள்..!

Sivalingam / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரம் முதல் நடித்து வரும் மாஸ்டர் மகேந்திரன் முதல் முறையாக கதாநாயகன் வேடத்தில் நடிக்க இருக்கும் நிலையில் அவரது முதல் படத்தை 4 இயக்குநர்கள் ஆசியுடன் துவக்கி வைத்துள்ளனர். 

சரத்குமார் நடித்த ’நாட்டாமை’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக திரை உலகில் அறிமுகமானவர் நடிகர் மாஸ்டர் மகேந்திரன். அதன் பிறகு அவர் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தில் கூட இளம் வயது விஜய் சேதுபதி கேரக்டரில் நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

சமீபத்தில் ஹாட்ஸ்டாரில் வெளியான ’லேபிள்’ என்ற தொடரில் அவர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பதும் அவரது கேரக்டருக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள் குவிந்தது என்பது தெரிந்ததே.



இந்த நிலையில் முதல் முறையாக மகேந்திரன் ஹீரோவாக நடிக்க இருக்கும், இந்த  படத்தின் பூஜை இன்று நடந்தது. இந்த பூஜையில் இயக்குநர்கள் சீமான், சரண், அருண் ராஜா காமராஜ் மற்றும் கல்யாண் ஆகியோர்கள் ஆசியுடன் படப்பிடிப்பை தொடங்கி வைத்தனர். 

இந்த படத்தை ஸ்ரீகாந்த் என்பவர் இயக்க உள்ளார், இவர் ஏற்கனவே ’எக்கோ’ என்ற படத்தை இயக்கி உள்ள நிலையில் அவரது இரண்டாவது படமாக இந்த படம் உருவாகிறது. இந்த படத்தில் மகேந்திரன் நாயகனாக நடிக்கன் ஜீவிதா என்ற புதுமுகம் நாயகியாக அறிமுகம் ஆகிறார்.

மேலும் இந்த படத்தில் சார்லி, கும்கி அஸ்வின், கலக்கப்போவது யாரு புகழ் சரத், உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க உள்ளார். இந்த படம் சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement