• Jan 18 2025

விஜய்யுடன் மறுபடியும் இணைந்த பிரபலம்.. ‘கோட்’ படத்தில் தரமான சம்பவம் இருக்கு..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடித்தமாஸ்டர்திரைப்படத்தில் பணிபுரிந்த பிரபலம் ஒருவர் மீண்டும்கோட்படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும்கோட்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெறவுள்ளது என்றும் ஏற்கனவே பார்த்தோம்.

 
இந்த நிலையில்கோட்படத்தில் ஒரு பாடலை தெருக்குரல் அறிவு எழுதி இருப்பதாகவும் இந்த பாடல் ஒலிப்பதிவு இன்று நடந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் இடம்பெற்ற மூன்று பாடல்களை கபிலன் வைரமுத்து, மதன் கார்க்கி மற்றும் கங்கை அமரன் எழுதியிருந்த நிலையில் தற்போது நான்காவது பாடலாசிரியராக தெருக்குரல் அறிவு இணைந்துள்ளார். இந்த பாடல் ஒரு ராப் பாடல் என்றும் இந்த பாடலை அறிவு எழுதி பாடியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே விஜய் நடித்தமாஸ்டர்திரைப்படத்தில்வாத்தி கம்மிங்என்ற பாடலை எழுதி அவரே பாடினார் என்பதும் அந்த பாடல் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகியது என்பது தெரிந்தது. அதேபோல்கோட்படத்தில் இடம்பெறும் அறிவு பாடலும் சூப்பர் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
இந்த நிலையில் விஜய் பாடிய ஒரு பாடலை சிங்கிள் பாடலாக அடுத்த மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வரும் என்றும் கூறப்படுகிறது.

இரண்டு வித்தியாசமான வேடங்களில் விஜய் நடிக்கும் இந்த படத்தில் மீனாட்சி சவுத்ரி, லைலா, சினேகா, பார்வதி நாயர் ஆகிய 4 நாயகிகள் நடிக்க மேலும் முக்கிய வேடத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு மே மாதம் முழுமையாக முடிவடைந்து விடும் என்று கூறப்படுகிறது.

 

Advertisement

Advertisement