• Apr 14 2026

ரூ.100 கோடி வசூல் செய்தவுடன் தமிழகத்தில் ரிலீஸ் ஆகும் படம்.. தேதியை அறிவித்த ரெட் ஜெயண்ட்..!

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாகி 100 கோடி ரூபாய் வசூல் செய்த மலையாள திரைப்படம் வரும் 15ஆம் தேதி தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மலையாள திரைப்படமானமஞ்சும்மெல் பாய்ஸ்’  தமிழில் டப்பிங் செய்யப்படாமல் மலையாளத்திலேயே வெளியானது என்பதும் இந்த படம் ஒரிஜினல் தமிழ் படங்களை விட அதிக வசூல் செய்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 
இந்த நிலையில் அடுத்த கட்டமாக மலையாள திரை உலகில் வெறும் 3 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி 100 கோடி வரை வசூல் செய்த திரைப்படம்பிரேமலு’. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கியுள்ள நிலையில் வரும் 15ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் மூக வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்பிரேமலுதமிழ் போஸ்டரையும் வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.



 
கிரிஷ் இயக்கத்தில் நடிகர் பகத் பாசில் தயாரிப்பில் உருவான இந்த படத்தில் முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடித்துள்ள நிலையில் இந்த படத்தின் அழுத்தமான கதை மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை தான் அனைவருக்கும் பிடிக்க காரணம் என்று கூறப்படுகிறது.

 

 ’மஞ்சும்மெல் பாய்ஸ்’  படம் போலவே தமிழக ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடுவார்கள் என்றும் ஏற்கனவே 100 கோடி ரூபாய் வசூல் செய்த இந்த படம் 150 கோடியை நெருங்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

Advertisement

Advertisement