• Jan 19 2025

பிரபல இயக்குநருடன் திருமணம்? சீரியல் நடிகை ரட்சிதா அதிரடி முடிவு?

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ரட்சிதா மகாலட்சுமி. சரவணன் மீனாட்சி சீரியலில் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டார்.

'பிரிவோம் சந்திப்போம்' என்ற தொடரில் அவருக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணமும் செய்துகொண்டார். 


எனினும், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு இன்னும் சட்டப்பூர்வமாக விவாகரத்து ஆகவில்லை.

கன்னடத் திரைப்படம் ஒன்றில் நடிகை ரட்சிதா நடித்து வருகிறார். அந்த படமும் விரைவில் வெளிவரவுள்ளது.


இந்த நிலையில், நடிகை ரட்சிதா பிரபல இயக்குநர் ஒருவரை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தினேஷ், இன்னும் தனது மனைவி ரட்சிதாவுடன் மீண்டும் இணைந்ததாகத் தெரியவில்லை.

இவ்வாறான நிலையில், நடிகை ரட்சிதா மறுமணம் செய்யவுள்ளார் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும், உறுதியான தகவல் இன்னும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement