• Jan 19 2025

புதிய தொடரில் என்ட்ரி கொடுக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர் முத்து! ஆரம்பமே அதிரடியா இருக்கே!

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் முக்கிய சீரியலில் ஒன்று தான் சிறகடிக்க ஆசை.

சிறகடிக்க ஆசை என்ற சீரியலில், ஒரு கூட்டு குடும்பத்தில் நடக்கும் சந்தோசம்,  பிரச்சனைகள், மற்றும் மாமியார் மருமகள் சண்டை ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய கதைக்களமாக கொண்டு நகர்வது தான் இந்த சீரியல்.

அதிலும் முக்கியமாக முத்து மற்றும் மீனா என்ற இரு கதாபாத்திரங்களை வைத்து, அவர்கள் அனுபவிக்கும் கஷ்டங்கள், வாழ்க்கையில் முன்னேற எடுக்கும் நடவடிக்கைகள் ஆகியவற்றை எடுத்துக்காட்டி வெற்றிகரமாக நகர்ந்து கொண்டிருக்கின்றது.


தற்போது, சிறகடிகை ஆசை சீரியலில் பொங்கல் சீர் நடப்பதால், அதில் ரோகிணியின் மாமா என புதிய நடிகர் என்ட்ரி ஆகியுள்ளதுடன், கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் சீரியல்  ஓடுகின்றது.


இந்த நிலையில், தற்போது வெற்றி வசந்த் தொடரில் நடித்துள்ள வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 


அதாவது விஜய்யில் ஒளிபரப்பாகி வரும் பொன்னி தொடரில் நாயகி பொன்னியின் உறவினராக என்ட்ரி கொடுத்து உள்ளார் சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் முத்து என்கிற வெற்றி வசந்த்.

எனவே, பொன்னிக்கு ரத்த சொந்தமாக அவர் என்ட்ரி கொடுத்துள்ளதோடு, அவருக்கு சீர் பொருட்கள் கொண்டு சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement