இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது
துருவ் விக்ரம் நடிக்க இருக்கும் படத்தை இயக்குவதற்கான பணிகளை செய்து வரும் நிலையில் அவரது அடுத்த படத்தில் பிரபல நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
‘பரியேறும் பெருமாள்’ என்ற திரைப்படத்தின் மூலம்
இயக்குனராக அறிமுகமான மாரி செல்வராஜ் அதன்
பின்னர் ’கர்ணன்’ ’மாமன்னன்’ ஆகிய படங்களை இயக்கி
உள்ளார் என்பதும் தற்போது அவர் கபடி விளையாட்டு
வீரர் ஒருவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தில் கபடி
வீரராக துருவ் விக்ரம் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மாரி செல்வராஜ் இயக்க
இருக்கும் அடுத்த திரைப்படத்தில் நடிகர் கார்த்தி நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை பிரின்ஸ்
பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த
அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும்
என்றும், துருவ் விக்ரம் படத்தை முடித்தவுடன் கார்த்தி படத்தை மாரி செல்வராஜ் தொடங்குவார்
என்றும் கூறப்படுகிறது.
2025 ஆம் ஆண்டு மாரி செல்வராஜ் - கார்த்தி
படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இந்த படத்தை முடித்துவிட்டு
அவர் தனுஷின் படத்தை இயக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னாள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை மாரி செல்வராஜ் இயக்குவதாக
செய்திகள் வெளியான நிலையில் தற்போது அவர் அடுத்தடுத்து கார்த்தி,
தனுஷ் படங்களை இயக்க திட்டமிட்டுள்ளதால் ரஜினிகாந்த் - மாரி செல்வராஜ் படம்
கிட்டத்தட்ட ட்ராப் என்ற கோலிவுட் வட்டாரங்கள்
கூறி வருகின்றன.
Listen News!