• Apr 27 2026

வீட்டுக் கடனுக்காக கஷ்டப்படும் முத்துவை கேலி செய்த மனோஜ்.! சிந்தாமணியின் புதிய திட்டம்

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், மனோஜ் வீட்டுக் கடன் பற்றி கவலைப்படாமல் நடு வீட்டில் அமர்ந்து பிரியாணி சாப்பிடுகிறார். இதை பார்த்து விஜயா திட்டுகிறார். 

அந்த நேரத்தில் அங்கு வந்த முத்துவும் மீனாவும் தாங்கள் இருவரும் கடனை பற்றி சிந்தித்து சாப்பிடவில்லை, தண்ணீர் மட்டுமே குடித்தோம் என்று சொல்கின்றனர்.

இதைக் கேட்ட மனோஜ், என்னுடைய சொத்து பங்கினையும் உனக்கு தருவதால் தான் நீ அப்படி வீட்டுக்கு உழைக்கிறாய் என்று கூறுகிறார். இதை கேட்ட அண்ணாமலை அவரை திட்டுகிறார்.

அதன் பின்னர் முத்துவும் மீனாவும் ஒன்பது லட்சம் ரூபாய் சேர்த்து விடுகின்றனர். அதே நேரத்தில் ரவியும் தன்னிடம் ஒரு லட்சம் ரூபாய் இருப்பதாகவும் அதனை முத்து மீனாவுக்கு கொடுத்து உதவுவதாகவும் ஸ்ருதியிடம் சொல்கிறார். அவரும் தன்னுடைய அப்பாவிடம் பத்து லட்சம் கேட்க வா என்று கேட்க, ரவி வேண்டாம் என்று மறுக்கிறார்.


அதன் பின்னர் ரவி ஒரு லட்சம் ரூபாயை கொடுக்கிறார். இதை பார்த்து முதலில் முத்து வேண்டாம் என்று மறுத்தாலும், தான் தன்னுடைய அப்பாவுக்காக செய்கிறேன், உன்னுடைய கஷ்டத்தில் எனக்கும் பங்கு இருக்கிறது என்று சொல்லி கொடுக்கிறார் ரவி.

தொடர்ந்து முத்துவும் மீனாவும் நிதியாளரிடம் சென்று 10 லட்சத்தை கொடுக்கின்றனர். இதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைகிறார். மேலும் காசு கொடுத்ததற்கு ஆதாரமாக ரசீதையும் புகைப்படமும் எடுக்கிறார் மீனா.

இவர்கள் அங்கிருந்து கிளம்பும்போது சிந்தாமணி வருகிறார். இதை கவனித்த அவர், 'என்ன அவர்கள் வந்து விட்டுப் போகிறார்கள், வட்டி கட்ட நேரம் கேட்கிறார்களா.?' என்று கிண்டலாக கேட்க, அவர்கள் 10 லட்சம் ரூபாய் கொடுத்து விட்டுப் போகிறார்கள், போகும் போக்கை பார்த்தால் முழு காசையும் சீக்கிரம் அடைத்து விடுவார்கள் என்று சொல்கிறார் நிதியாளர்.

இதைக் கேட்ட சிந்தாமணி பொறுத்துக்கொள்ள முடியாமல் மனோஜ் மீது போலீஸ் புகார் கொடுக்குமாறு சொல்கிறார். அதன்படி மனோஜ் போலி கையெழுத்து போட்டு ஏமாற்றியதாக போலீஸ் புகார் கொடுக்குமாறு கூறுகிறார் சிந்தாமணி. இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement