இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் மலையாள திரைப்படமான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் சக்கைப் போடு போட்டிருந்தது. தமிழ் சினிமாவின் ஆரம்பத்தில் இந்த ஆண்டு வெளியான திரைப்படங்கள் பெரிதாக எடுபடாத நிலையில் அந்த இடத்தை பூர்த்தி செய்தது மஞ்சுமெல் பாய்ஸ்.
பிரபல இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் தான் மஞ்சுமெல் பாய்ஸ். இந்த படத்தில் நடிகர்கள் சவுபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்தனர்.
d_i_a
கொடைக்கானல் குகையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் கேரளாவை விட தமிழ்நாட்டில் மிகப் பெரிய வெற்றி படமாக மாறியது. இந்த படம் உலக அளவில் 240 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இருப்பதாக தகவல்கள் அதிகாரவூர்வமாகவே வெளியானது.
இந்த நிலையில், மஞ்சுமெல் பாய்ஸ் படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்றை இயக்குனர் சிதம்பரம் பகிர்ந்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில், மலையாள சினிமாவில் இருந்து ஒரு வருஷத்துக்கு நூறு படங்கள் வெளியாகின்றது. ஆனால் அதில் எந்த மந்திரமும் கிடையாது. அடுத்த வருடமே இதை தமிழ், கன்னடம், மற்றும் இந்தி சினிமா கூட செய்யலாம்.
மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் மொத்த பட்ஜெட்டில் 30 தொடக்கம் 40% அந்தப் குகையை உருவாக்குவதற்காகவே செலவானது. அது குகை அல்ல. பண குழி என்று தெரிவித்துள்ளார். தற்போது இவர் வழங்கிய பேட்டி வைரல் ஆகி வருகிறது.
Listen News!