• Jun 27 2026

மதுரை ரெடியா? - இணையத்தை அதிரவிட்ட ஆர்.ஜே. பாலாஜியின் அப்டேட்.! பின்னணி என்ன?

shali / 2 months ago

Advertisement

Listen News!

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முழுக்க முழுக்க பக்கா கமர்ஷியல் மாஸாக இப்படம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. Dream Warrior Pictures நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். மேலும், நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே பாலாஜி இப்படத்தை இயக்கி வருகிறார் என்பது கூடுதல் சிறப்பு.


இந்நிலையில், ‘கருப்பு’ படத்தை பற்றிய புதிய அப்டேட்டை இயக்குநர் ஆர்.ஜே பாலாஜி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் “மதுரை ரெடியா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த ஒரு வரி பதிவே ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இதன் மூலம் படத்தின் இசை வெளியீட்டு விழா ஏப்ரல் 26-ம் தேதி மதுரையில் நடைபெறவுள்ளதனையே கூறியுள்ளார் 

மேலும், இப்படம் வரும் மே 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக்ஷன், எமோஷன், மாஸ் அம்சங்கள் கலந்து உருவாகியுள்ள ‘கருப்பு’, சூர்யா ரசிகர்களுக்கு ஒரு திருவிழா போன்ற அனுபவத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

Advertisement