• May 17 2026

‘த்ரிஷ்யம் 3’ படத்திற்கு அமேசான் பிரைம் தொடர்ந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லால் நடித்துவரும் ‘த்ரிஷ்யம் 3’ திரைப்படம் தொடர்பாக முக்கியமான சட்டப் பிரச்சனை ஒன்று எழுந்துள்ளது. இந்த படத்தின் ஓடிடி (OTT) உரிமை குறித்து Amazon Prime Video நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.


அந்த மனுவில், முந்தைய ஒப்பந்தத்தின் படி ‘திரிஷ்யம்-3’ படத்தின் டிஜிட்டல் உரிமை தங்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்று அமேசான் பிரைம் வீடியோ தரப்பு வாதிட்டது. ஆனால், தயாரிப்பு நிறுவனம் Aashirvad Cinemas வேறு நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்த விவகாரம் நீதிமன்றத்துக்குச் சென்றது.

வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், முதற்கட்டமாக இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, வரும் மே 15ம் தேதி வரை ‘திரிஷ்யம்-3’ படத்தின் ஓடிடி உரிமையை எந்த மூன்றாவது நிறுவனத்திற்கும் வழங்கக்கூடாது என்று Delhi High Court உத்தரவிட்டுள்ளது.

இந்த தீர்ப்பு, ஓடிடி உரிமைகள் தொடர்பான ஒப்பந்தங்களில் சட்டபூர்வமான நடைமுறைகள் எவ்வளவு முக்கியம் என்பதை மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டுகிறது. மேலும், இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை மற்றும் இறுதி தீர்ப்பு குறித்து திரைப்பட ரசிகர்கள் மற்றும் தொழில்துறையினர் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


Advertisement

Advertisement