• May 09 2026

நயன்-விக்கியுடன் நியூ இயர் கொண்டாடும் மாதவன்! துபாய் புகைப்படம் வைரல்...

shali / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை நயன்தாரா சினிமாத்துறையில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். இந்நிலையில் பிறக்க இருக்கும் நியூ இயரை கொண்டாடுவதற்காக துபாய் சென்றுள்ளார்.  கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் பிரபல நடிகர் மாதவனுடன் இவர் ஷேர் செய்துள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 


நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் இருவரும் திருமணம் முடிந்த பின்னர் ஜோடியாக பல இடங்களுக்கு போகும் புகைப்படங்களை தனது சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்வது வழக்கம். அப்படி இருக்க நயன் தனது ஸ்டோரியில் "இனிய புதுவருட வாழ்த்துக்கள்,அழகான மனிதர்களுடன் அழகான நினைவுகள்  உருவாகியுள்ளது. இனிமையுடன் இந்த நேரம் ஆரம்பமாகிறது. மேடி சார் மற்றும் சரிதா மேமுடன் ஒரு அழகான இரவு" என்று பதிவிட்டு நடிகர் மாதவன், அவரது மனைவி, விக்னேஷ் சிவன், நயன்தாரா உள்ள புகைப்படத்தினை ஷேர் செய்துள்ளார். 


சமீபத்தில் நயன் தனது குடும்பத்துடன் துபாய்க்கு சுற்றுலா சென்றிருந்தார். இந்த புகைப்படங்களை கூட விக்னேஷ் சிவன் பகிர்ந்திருந்தார். அது ரசிகர்களிடையே வைரலாகி வரும் நிலையில் நயன் பகிர்ந்த ஸ்டோரி தற்போது ட்ரெண்டாகி வருகிறது.


Advertisement

Advertisement