• Oct 05 2024

மீண்டும் விஜய்யுடன் Love U Chellam... தளபதி 69ல் பிரகாஷ் ராஜ்... நெகிழ்ச்சிப் பதிவு...

subiththira / 11 hours ago

Advertisement

Listen News!

தளபதி சினிமாவில் கடைசி படமாக 69வது  திரைப்படத்தை அறிவித்தார். இந்த திரைப்படத்தை இயக்குகிறார் அ.வினோத். இசையமைப்பாளர் அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். நடிகர் விஜய்க்கு அனிருத் இசை அமைக்கும் ஐந்தாவது படம் இது. 


இந்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியோல், நடிகைகள் பூஜா ஹெக்டே, 'பிரேமலு' படம் மூலம் பிரபலமான மலையாள நடிகை மமிதா பைஜு, இயக்குநர் கௌதம் மேனன், நடிகை பிரியாமணி, நடிகர் நரேன் உள்ளிட்டோரை அறிவித்திருந்தது. இந்தப் பட்டியலில் நடிகர் பிரகாஷ் ராஜும் இணைந்திருக்கிறார்.


தளபதியுடன் கில்லி, சிவகாசி, ஆதி, போக்கிரி, வில்லு, வாரிசு என பிரகாஷ்ராஜ் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார். அடுத்ததாக இந்தப் படத்திலும் இணைந்திருப்பது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது. 


இது தொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜ் தன் எக்ஸ் பக்கத்தில், ``மாற்றுமொருமுறை தளபதி 69-ல் விஜய் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவுடன் பயணிப்பதில் மகிழ்ச்சி. அரவணைத்து வரும் அனைத்து அருமை மக்களுக்கும்  Love U Chellams" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.






Advertisement

Advertisement