• Oct 13 2024

ஹாரி பாட்டர் புகழ் நடிகை லண்டனில் காலமானார்! பிரபலங்கள் பலரும் அஞ்சலி

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்து மிகவும் பிரபலம் ஆன நடிகை தான் டேம் மேகி ஸ்மித். இவர், 1969 ஆம் ஆண்டு வெளியான ‘தி ப்ரைம் ஆஃப் மிஸ் ஜீன் ப்ரோடி’ என்ற படத்தில்  நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார். அதன் பின்பு கலிபோர்னியா சூட் என்ற படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கார் விருதையும் வென்றார்.

மிகச் சிறந்த பிரிட்டிஷ் நடிகைகளுள் ஒருவராக போற்றப்படும் இவர் ஏழு முறை ஆஸ்கார் அவார்டுக்கு நாமினேட்   செய்யப்பட்டுள்ளார். மேலும் ‘டவுன்டவுன் அப்பே’ மற்றும் ஹாரி பாட்டர் படங்கள் மூலமாக இளம் தலைமுறைகள் மத்தியில் பிரபலமாக காணப்பட்டார்.

அதிலும் குறிப்பாக ஹாரி பாட்டர் படங்களில் இவர் ஏற்று நடித்த கேரக்டர் மிகவும் பிரசித்தி பெற்றது. இது தொடர்பில் அவர் வழங்கிய ஒரு பேட்டியில் ஹாரி பாட்டர் படம் எனக்கு பென்ஷன் போன்றவை என்று குறிப்பிட்டு இருந்தார்.


மார்க்ரெட் ஸ்மித் என்ற இயற்பெயர் கொண்ட இவர், திரைப்படங்களுக்காக டேம் மேகி ஸ்மித் என்று பெயரை மாற்றிக் கொண்டுள்ளாராம் ,மேலும் தனது சக நடிகரான ராபர்ட் ஸ்டீபனை 1967ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார் .இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில், மூத்த நடிகையான டேம் மேகி ஸ்மித் வயது மூப்பின் காரணமாக அவதிப்பட்டு லண்டனில் உள்ள ஒரு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். இதனை அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளார்கள். தற்போது இவருடைய மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றார்கள்.

Advertisement