• Oct 13 2026

IIFA விருது மேடையை பொன்னியின் செல்வன் மேடையாக்கிய குழுவினர்! விருதுகளை கெத்தாக அள்ளிய மணி டீம்!

shali / 2 years ago

Advertisement

Listen News!

நேற்றைய  IIFA உற்சவம் 2024 விருதுகளை வென்ற தென்னிந்திய சினிமா நட்சத்திரங்களுக்கு வழங்கப்பட்டது. இந்த விருது கடந்த 2016ஆம் ஆண்டில் இருந்து வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டு 9வது விருது வழங்கும் ஆண்டு ஆகும். பிரமாண்டமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் விக்ரம், ராணா டகுபதி, ஏ.ஆர்.ரஹ்மான், வெங்கடேஷ், மணி ரத்னம், சமந்தா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 


அதாவது தென்னிந்திய சினிமாவைச் சேர்ந்த கோலிவுட், டோலிவுட், மாலிவுட் மற்றும் சாண்டில் வுட் என அனைத்து திரை உலகைச் சார்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தமிழில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு அதிக விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.


குறிப்பாக, சிறந்த பாடல்கள், சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த துணை நடிகர், சிறந்த பின்னணி பாடகி, சிறந்த முன்னணி கதாபாத்திரம் ஆண், சிறந்த முன்னணி கதாபாத்திரம் பெண் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை தமிழில் வென்றது. உண்மையைச் சொல்லப்போனால், இந்த மேடை பொன்னியின் செல்வனுக்கான மேடையாகவே மாறிப்போனது எனக் கூறலாம். 



Advertisement

Advertisement