• Mar 26 2026

"DC" பட போஸ்டர் லட்சணத்தைப் பாருங்க.! கேவலமா இல்லையா.? ப்ளூசட்டை மாறன் ஆதங்கம்

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில், லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்கள் பெரும்பாலும் எதிர்பார்ப்பு கொண்ட படங்களாகவே காணப்படுகின்றது. இந்நிலையில், இவர் நடிப்பில் உருவாகும் புதிய படம் ‘DC’ தற்போது பெரும் கவனம் பெற்றுள்ளது. 

இந்த படத்தின் தற்போது வெளியான போஸ்டர் மற்றும் பட விளம்பரங்கள் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ‘DC’ படத்தை இயக்குகிறார் அருண் மாதேஸ்வரன்.


சமீபத்தில் வெளியான போஸ்டர், படத்தின் தீவிரமான காட்சி மற்றும் கதாபாத்திரங்களை பிரதிபலிக்கிறது. இதில், கதையின் ஹீரோவான லோகேஷ் கனகராஜ் கொடூரமாக நிற்பது, அவரது ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

ஆனால், போஸ்டர் வெளியீட்டிற்கு பின்னர் சமூக வலைத்தளங்களில் விமர்சகர்கள் சில கேள்விகளை எழுப்பியுள்ளனர். குறிப்பாக, புகழ்பெற்ற சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது கருத்தில், “பல இயக்குநர்கள், ஹீரோக்கள் எழவெடுத்த குப்பைகளை படமாக எடுக்கின்றனர். தற்பொழுது லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கும் DC படத்தின் போஸ்டர் லட்சணத்தைப் பாருங்கள். இதனை அருண் மாதேஸ்வரன் இயக்குகின்றார். 


ஒண்ணுக்கு ஒண்ணு சளைச்சது இல்ல. நீங்கள் கோடிகளில் சம்பாதிக்க இளைனர்கள் மத்தியில் இப்படி கொடூர வன்முறை மற்றும் போதை கலாச்சார காட்சிகளை தெடர்ந்து உங்கள் இருவரின் படங்களில் வைப்பது கேவலமாக இல்லையா.?” என்றார்.

இந்தக் கருத்து, திரைப்படத்தில் காணப்படும் கொடூரம் மற்றும் வன்முறை காட்சிகள் இளம் ரசிகர்களின் மனதில் உண்டாக்கும் பாதிப்புகள் குறித்து வலியுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement