• Jul 27 2024

சூப்பர் ஸ்டார் ரஜினி படத்திற்கு ஜெட் வேகத்தில் சம்பத்தை உயர்த்திய லோகேஷ்! எவ்வளவு தெரியுமா?

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வெளியான மாநகரம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் லோகேஷ் கனகராஜ். இவர் குறுகிய காலத்தில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றிருந்தார்.

ஆரம்பத்தில் குறும்படங்களை இயக்கிக் கொண்டிருந்த இவர், அதற்குப் பிறகு தமிழ்த் திரையுலகில் இயக்குனராக களம் இறங்கி தற்போது ஏழு ஆண்டுகளாக பட்டையை கிளப்பி வருகிறார்.

இவர் இயக்கிய படங்களில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்தார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி படத்தை இயக்கி வருகிறார்.


இந்த நிலையில், தற்போது கூலி படத்திற்காக அவர் பெற உள்ள சம்பள விவரம் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதாவது ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வரும் நிலையில், அதுக்காக ஷூட்டிங் முடிவடைந்த உடன் லோகேஷ் இயக்கும் கூலி திரைப்படத்தில் நடிக்க உள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இந்த படம் இருப்பதோடு இதற்கு சுமார் 50 கோடி ரூபாயை சம்பளமாக கேட்டு உள்ளாராம் லோகேஷ் கனகராஜ்.

Advertisement

Advertisement