• Apr 27 2024

லோகேஷ் கனகராஜ் - விஜய்யின் 'தளபதி 67’ படத்தில் கமல்..கசிந்த தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தளபதி 67 அறிவிப்பு டீசரை பார்த்து நடிகர் கமல் ஹாசன் இம்ப்ரெஸ் ஆகியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இறுதியாக கமல்ஹாசன் நடிப்பில் 'விக்ரம்' படத்தை இயக்கியிருந்தார். இதையடுத்து தனது அடுத்த படத்திற்காக நடிகர் விஜய்யுடன் இணைந்துள்ளார்.

விஜய்யின் கேரக்டர் அறிமுக வீடியோ 'தளபதி 67' அறிவிப்பாக இருக்கும் என்றும், அந்த ப்ரமோ வீடியோ 67 வினாடிகள் கொண்டதாக இருக்கும் என்றும் சொல்லப்படுகின்றது. லோகேஷ் கனகராஜ் தனது குருவும், 'விக்ரம்' பட நடிகருமான கமல்ஹாசனிடம் ப்ரோமோவைக் காட்டினாராம், அதைப் பார்த்த அவர் மிகவும் இம்ப்ரெஸ் ஆகியிருக்கிறாராம்.


அதனால் 'தளபதி 67' படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்க கமல் பச்சைக்கொடி காட்டியுள்ளாராம். அத்தோடு இப்படம் லோகேஷ் கனகராஜின் சினிமாடிக் யுனிவர்ஸின் ஒரு பகுதியாக இருக்கும் என்று கூறப்படும் நிலையில், படத்தின் கிளைமாக்ஸில் கமல் தோன்ற வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. விஜய் இப்படத்தில் 50 வயது கேங்ஸ்டர் கேரக்டரில் நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின.

'தளபதி 67' படப்பிடிப்பு ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டது. அத்தோடு சென்னை மற்றும் கொடைக்கானலில் சில சிறிய பகுதிகளின் படப்பிடிப்பை படக்குழுவினர் முடித்துள்ளனர். வாரிசு படம் வெளியானதும், தளபதி 67 படத்தின் அறிவிப்பு வெளியாகும் என முன்பே தெரிவித்திருந்தார் லோகேஷ். 

எனினும் தற்போது படம் வெளியாகி 2 வாரங்கள் கழிந்திருக்கும் நிலையில், வெகு விரைவில் தளபதி 67 படத்தின் அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.




Advertisement

Advertisement

Advertisement