• Mar 27 2023

ஷூட்டிங்கில் கண்டபடி திட்டிய பாண்டியராஜன்… தனியாக அழைத்த பிரபு செய்த காரியம்

stella / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இயக்குநர் பாக்கியராஜுடம் உதவி இயக்குநராக இருந்து “கன்னி ராசி” என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் பாண்டியராஜன். இவர் இயக்குநராக மட்டுமல்லாது நடிகராகவும் வலம் வந்தவர்.மேலும் கன்னிராசி திரைப்படம் 1985 ஆம் ஆண்டு வெளியானது.


இதில் பிரபு, ரேவதி, கவுண்டமணி, சுமித்ரா ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.இந்த நிலையில் “கன்னி ராசி” திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடந்த ஒரு சுவாரஸ்ய சம்பவம் குறித்து இப்போது பார்க்கலாம். அதாவது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது பிரபு, பாண்டியராஜன் எதிர்பார்த்தது போன்ற நடிப்பை வெளிப்படுத்தவில்லையாம்.


ஆதலால் பாண்டியராஜன் பிரபுவை சத்தம்போட்டபடி திட்டிக்கொண்டே இருந்தாராம்.படப்பிடிப்பு தொடங்கிய மூன்று நாட்கள் இவ்வாறுதான் பிரபுவை திட்டிக்கொண்டே இருந்தாராம். நான்காவது நாள் பொறுமையிழந்த பிரபு, பாண்டியராஜனை அருகில் அழைத்து “தம்பி, நீ என் கிட்ட எதாவது சொல்றதா இருந்தா தனியா வந்து சொல்லு. நீ பாட்டுக்கு வந்து சத்தம் போடுற. எதுவா இருந்தாலும் என் கிட்ட தனியா வந்து சொல்லு, நான் கேட்டுக்குறேன்” என்றாராம்.


இது குறித்து ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்ட பாண்டியராஜன் “பிரபு மிகப்பெரிய நடிகர். ஆனால் நான் அப்போது ஒரு புதுமுக இயக்குநர்தான். ஆனாலும் நான் அப்படி நடந்துகொண்டேன். பிரபுவோ சிவாஜி கணேசனின் மகன். அவர் நினைத்திருந்தால் என் படத்தில் இருந்து விலகியிருக்கலாம். ஆனால் என்னை அழைத்து மிகவும் சாந்தமாக பேசினார்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement