• Jan 18 2025

TRPல் தருமாறும் எதிர்நீச்சல் சீரியல்... கதாநாயகிகள் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியும?

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

சன் தொலைக்காட்சியில் டாப் 5 இருக்கும் சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன் நம்பர் 1 இடத்தில் இருந்த நிலையில் மாரிமுத்து மறைவுக்கு பின் சற்று TRPல் தட்டுத்தடுமாறியது. இந்நிலையில் தற்போது எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கு கிடைக்கும் சம்பளம் தொடர்பான தகவல் கிடைத்துள்ளது.  


மாரிமுத்து நடித்து வந்த ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் அவருக்கு பதிலாக தற்போது வேல ராமமூர்த்தி நடித்து வருகிறார். இவருடைய நடிப்பு தற்போது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற துவங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது.


எதிர்நீச்சல் சீரியலில் கதாநாயகிகளாக ஜொலித்து வரும் கனிகா, மதுமிதா, பிரியதர்ஷினி மற்றும் ஹரிப்ரியா போன்றவர்களின் நடிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 


இந்நிலையில், எதிர்நீச்சல் சீரியலின் கதாநாயகிகள் சம்பளம் குறித்து வெளியான தகவலின் படி கதையின் முக்கிய நாயகியாக நடித்து வரும் நடிகை மதுமிதா ஒரு நாளைக்கு ரூ. 15,000 ஆயிரம் சம்பளமாக வாங்கி வருகிறாராம். அதே போல் நடிகை கனிகா ரூ. 12,000 ஆயிரம் சம்பளமாக வாங்குகிறார். மேலும் பிரியதர்ஷினி ரூ. 10,000 ஆயிரம் மற்றும் ஹரிப்ரியா ரூ. 12,000 ஆயிரம் சம்பளமாக வாங்கி வருகிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement

Advertisement