• Jan 18 2025

கோபத்தில் நடிகர் அஜித்... அஜித் மகளை வீடியோ எடுத்த நபர்... விடீயோவால் நடந்த விபரீதம்... உண்மை இதுதான்...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. மகிழ் திருமேனி இயக்கி வரும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து அர்ஜுன், திரிஷா, ஆரவ் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.


மே 1 அஜித் பிறந்தநாள் அன்று விடாமுயற்சி திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மறுபுறம் இப்படம் தீபாவளிக்கு வருவதற்கு தான் அதிக வாய்ப்புகள் என்று கூறுகின்றனர். எது நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.


இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் அஜித், ரசிகர் ஒருவரின் மொபைல் போனை வாங்கி அதிலிருந்து தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை டிலீட் செய்வது போல் வீடியோ ஒன்று வைரலானது. ரசிகர் எடுத்த வீடியோவை கூட டிலீட் செய்யவேண்டுமா? என பலரும் அஜித் மீது கேள்வி எழுப்பினார்கள். 


ஆனால், அது உண்மையில்லையாம். அஜித்தின் மகள் அனோஷ்காவை தான் அந்த நபர் வீடியோ எடுத்துள்ளாராம். இதை அறிந்தபின் ஒரு தந்தையாக கோபத்துடன் சென்று அந்த நபரின் மொபைல் போனை வாங்கி அதிலிருந்து வீடியோவை அஜித் டிலீட் செய்துள்ளார் என்ற தகவல் தற்போது கிடைக்க பெற்றுள்ளது. 

Advertisement

Advertisement