லியோ பட ஆடியோ வெளியீட்டு இசை நிகழ்வு இம் மாதம் 30ஆம் திகதி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் குறித்த நிகழ்ச்சிக்கு மக்கள் இயக்கத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த் பல்வேறு கட்டுப்பாடுகளைவிதித்துள்ளார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இளையதளபதி விஜய் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம் தான் லியோ. இப்படத்தினை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
இளையதளபதியின் லியோ படத்தின் ஆடியோ வெடளியீட்டுவிழாவில் கலந்து கொள்ளும் ரசிகர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் ரசிர்கள் அதிர்ச்சியடைத்துள்ளனர்.
லியோ இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் செப்டம்பர் 30_ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது. குறித்த நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு விஜய் ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தாலும் மாவட்ட ரீதியில் 200 மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் மட்டுமே இசைநிகழ்சியில் கலந்து காெள்ள அழைப்பு என மக்கள் இயக்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்ல பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்காமல் ரசிகர்கள் சொந்த வாகனங்களிலே தான் இசை வெயீட்டு நிகழ்சிக்கு வர வேண்டும், அரங்கின் வெளி இடங்களில் அனுமதி பெறமால் பேனர்கள் வைக்க தடை,என புஸ்ஸி ஆனந்த் பல கட்டுப்பாடுகளை விதித்த நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
மேலும் லியோ படம் தொடர்பாகஅறிந்து கொள்ள இதையும் படிங்க
Listen News!