• May 13 2024

லியோ திரைப்படத்தின் அந்தக் காட்சிக்கு மட்டும் இத்தனை கோடி செலவா?- வெளியாகிய லேட்டஸ்ட் அப்டேட்

stella / 7 months ago

Advertisement

Listen News!


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் எனப் பலரும் நடித்துள்ள திரைப்படம் ‘லியோ’. இதன் பேட்ச் வொர்க் மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.மேலும் லலித் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாக இருக்கிறது.

இப்படத்திலிருந்து நேற்றும் இன்னும் புதிய போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வந்தது.லியோ திரைப்படம் உலகளவில் வெளியிடப்படுவதற்கு 42 நாட்களுக்கு முன்னதாக, டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்ட நிலையில், இங்கிலாந்தில் ஒரே நாளில் 10000+ டிக்கெட்டுகள் பதிவு செய்யப்பட்டன.


லியோ திரைப்படம் ரஜினிகாந்தின் பாட்ஷா படத்தின் சாயலில் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.பாட்ஷா படத்தில் மிகப்பெரிய டானாக இருந்த ரஜினி எப்படி தனது குடும்பத்திற்காக அனைத்தையும் மறைத்துவிட்டு சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வருவாரோ அதே போல் லியோ திரைப்படத்தில் விஜய்யும் இருப்பார் என கூறுகின்றனர். ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என தெரியவில்லை. 


இந்த நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற Hyena Sequence காட்சி காஷ்மீரில் படமாக்கப்பட்டதாகவும் இந்த காட்சியின் கிராபிக்ஸ் பணிகளுக்கு மட்டும் மொத்தம் ரூ. 15 கோடி செலவு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.அதேபோல் காஷ்மீரில் படமாக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்குமாம் என்றுமு் கூறப்படுகின்றது.


Advertisement

Advertisement

Advertisement