• Jun 01 2026

ஷாருக்கானுடன் மோதும் 10 ரஷ்ய வீரர்கள்.. வெளியானது 'கிங்' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் படங்களில் ஒன்றாக திகழ்கிறது கிங். பிரபல இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த கூட்டணி உருவாகியதிலிருந்தே படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், புதிய தகவல்கள் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. 


அதாவது, படத்தின் முக்கியமான ஆக்ஷன் காட்சிக்காக ஷாருக் கான் ரஷ்யாவைச் சேர்ந்த 10 சர்வதேச சண்டைக் கலைஞர்களுடன் மோதும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்களிடையே மேலும் ஆவலை அதிகரித்துள்ளது.

இந்த பிரம்மாண்ட ஆக்ஷன் காட்சிக்காக மும்பையில் உள்ள கோல்டன் டொபாக்கோ ஸ்டுடியோவில் ஒரு மிகப்பெரிய மில் செட் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த செட், சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டதாகவும், காட்சிகளுக்கு ஒரு ரியல் மற்றும் ரா லுக் கொடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இந்த காட்சிகளுக்காக பல நாட்களாக தீவிரமான ரிகர்சல்கள் நடைபெற்று வருகின்றன. ஷாருக் கான் தனது வயதைக் கடந்து கூட அதிரடி காட்சிகளில் முழு ஈடுபாட்டுடன் கலந்து கொள்வது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. 

Advertisement

Advertisement