ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தினை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.இதற்கான ப்ரோமோஷன் வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தினை தமிழ்நாட்டில் வெளியிடுவதற்கு லைகா நிறுவனம் தடை விதித்துள்ளது.
அதாவது தற்போது இந்தியன் 2 திரைப்படத்தின் தோல்வியின் பின் லைகா நிறுவனம் அதன் பகுதி மூன்றிற்கு ஷங்கரிற்கு வழங்கப்பட்ட சம்பளத் தொகையினை இந்தியன் 2 வினால் ஏற்பட்ட நஷ்டத்தினை ஈடு செய்வதற்காக கேட்டுள்ளதுடன் இதற்கு ஷங்கர் ஒத்துப்போகாமையினால் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல் இந்தியன் பகுதி 3 இன் இப்பொழுது எடுத்து முடிக்கப்பட்ட காட்சிகளினை ஒளிப்பதிவு செய்து காட்டிய பின்னரே மிகுதி பகுதிகளிற்கு பணம் தருவதாக விதிக்கப்பட்ட கோரிக்கைக்கும் ஷங்கர் ஒத்துப்போகாமையும் ஒரு காரணமாக மாறியுள்ளது.
இவ்வாறான காரணங்களினால் தமிழ்நாட்டில் கேம் சேஞ்சர் திரைப்படம் வெளியாகாதவாறு ரெட் போட்டுள்ளதுடன் குறித்த பஞ்சாயத்தினை கவுன்சிலிங் மூலம் முடிவுக்கு கொண்டு வர முடிவெடுத்துள்ளது லைகா நிறுவனம்
Listen News!