பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் முதலாவது சிங்கிள் நேற்றைய தினம் வெளியாகியிருந்தது.
வெளியாகி சில மணி நேரங்களுக்குள் அதிக வரவேற்பை பெற்றிருந்ததுடன் அனிருத் இசையமைத்திருந்தமையினால் அனைவராலும் வைப் செய்யப்பட்டு வருகின்றது.
மங்காத்தா திரைப்படத்தின் பின்னர் அஜித் மற்றும் திரிஷா இணைந்து நடிக்கவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது.
இந்நிலையில் அனிருத் இசையில் இடம்பெற்றுள்ள இப் பாடல் பகத் பசில் நடிப்பில் வெளியாகிய ஆவேஷம் படத்தின் "இல்லுமினாட்டி" பாடலை போலவே இருப்பதாக ரசிகர்கள் மீம் கிரியேட் பண்ணி வருகின்றனர்.
மற்றும் அனிருத் இப்பாடலினை சுட்டாரா அல்லது வேறொரு படத்தின் இசையினை இரண்டு இசையமைப்பாளர்களும் கொப்பி பண்ணியுள்ளார்களா என பலவிதமாக கமெண்ட் செய்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பாக அனிருத் மிகவும் பிஸியான இசையமைப்பாளர் ஆகையால் அவர் அதை பண்ணியிருந்தால் தவறில்லை எனவும் ஒரு பக்கம் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இருப்பினும் அஜித் ரசிகர்கள் சிலர் எதிர்பார்த்த அளவிற்கு பாடல் இல்லாமையினால் அனிருத்தின் மேல் கோபத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Listen News!