• Jan 19 2025

ஜெர்மன் பாஷையில் தனுஷை திட்டித் தீர்த்த லேடி சூப்பர் ஸ்டார்! முழு விபரம் இதோ..

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வெளியாகி சக்கைப் போடு போட்ட திரைப்படம் தான் நானும் ரவுடிதான். இந்த திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க அதில் நயன்தாராவும் விஜய் சேதுபதியும் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் நடிக்கும் போது விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

இதை தொடர்ந்து கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக காதலித்த இருவரும் 2022 ஆம் ஆண்டு பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார்கள். இந்த திருமணம் நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஆவணப் படமாக வெளியாகும் என்று அப்போது கூறப்பட்டது. ஆனாலும் இரண்டு வருடங்கள் கடந்தும் இந்த ஆவணப்படம் வெளியாகவில்லை. ஒரு வழியாக எதிர்வரும் பதினெட்டாம் தேதி நெட்ப்பிளிக்சில் வெளியாக உள்ளது.

d_i_a

இவ்வாறான நிலையில் நயன்தாராவின் ஆவணப்படம் ரிலீஸ் ஆகாமல் தள்ளிப் போவதற்கு காரணம் தனுஷ் தான் என நயன்தாரா பகிரங்கமாக குற்றம் சாட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அவருடைய அறிக்கையை பார்த்த பலரும் நயன்தாராவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றார்கள்.


இந்த நிலையில் நயன்தாரா குறிப்பிட்ட அறிக்கையில் ஜெர்மன் வார்த்தை ஒன்றை பயன்படுத்தி தனுஷை திட்டி உள்ளார். அதாவது அடுத்தவர் துன்பத்தில் இன்பம் காண்பவர் என்ற வார்த்தையை பயன்படுத்தி தனுஷை திட்டி உள்ளார். தற்போது இந்த தகவல் வைரலாக உள்ளது. மேலும் குறித்து அறிக்கையில் அவர் தெரிவித்த விடயங்கள் வருமாறு,



Advertisement

Advertisement