• Jan 18 2025

கங்குவா நடிகையிடம் லட்சக்கணக்கில் பண மோசடி! தீவிர தேடுதலில் போலீசார்!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

பாலிவுட்டில் முக்கிய பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை திஷா பதானி. இவர் அண்மையில்  சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்நிலையில் இவருக்கு மோசடி நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. 


இந்நிலையில், திஷா பதானியின் தந்தை உ.பி. அரசாங்கத்தில் உள்ள உயர் அதிகாரிகளுடன் தங்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், நாங்கள் கேட்கும் பணத்தை கொடுத்தால் அரசாங்க கமிஷனில் உயர் பதவி வாங்கு தருவதாக சில மாதங்களுக்கு முன்பு முன்னாள் போலீஸ் அதிகாரி ஜெகதீஷ் சிங் பதானியிடம் மர்ம நபர்கள் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.


இதை உண்மை என நம்பிய ஜெகதீஷ் சிங் பதானி, ரூ.20 லட்சத்தை அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியதோடு, ரூ.5 லட்சம் ரொக்கமாகவும் கொடுத்துள்ளார். ரூ.25 லட்சம் பணம் கொடுத்து 3 மாதங்கள் ஆகியும் அவருக்கு எந்த பதவியும் வழங்கப்படாததால் மோசடி கும்பலிடம் பணத்தை திரும்ப கேட்டுள்ளார்.


அப்போது ஜெகதீஷ் சிங் பதானியை மோசடி கும்பல் மிரட்டியுள்ளனர்.  இதனிடையே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜெகதீஷ் சிங் பதானி இது தொடர்பாக போலிசீடம் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிந்துள்ள போலீசார் மோசடி கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். 




Advertisement

Advertisement