• Dec 04 2023

லேடி சூப்பர் ஸ்டார் 75- ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நயன்தாராவின் அன்ன பூரணி படத்தின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 1 week ago

Advertisement

Listen News!


லேடி சூப்பர்ஸ்டார், நயன்தாராவின்  இந்த  திரைப்பயணத்தில், அவர் மிக கடின உழைப்பினாலும் மற்றும் திறமை மிகு நடிப்பினாலும்,  தன்னை மிகச்சிறந்த நடிகையாக திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக  முன்னேறியுள்ளார்.


அவரது அற்புதமான நடிப்பு மற்றும் அவர் ஏற்று நடிக்கும் வலுவான கதாபாத்திரங்களின் மூலமாக, அவர் கிட்டத்தட்ட இருபது ஆண்டு காலம் உலகெங்கிலும் உள்ள சினிமா பார்வையாளர்களை தொடர்ந்து மகிழ்வித்துள்ளார்.இவரது 75வது திரைப்படம் தான் அன்ன பூரணி.


இந்த படத்தில் ஜெய், இயக்குநர் கே எஸ் ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, ரேணுகா, சத்யராஜ், குமாரி சச்சு, அச்சு குமார், சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் பூர்ணிமா ரவி உள்ளிட்ட பலர் நடிப்பதோடு இப்படத்தை இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா என்பவர் இயக்கி வருகிறார்.


அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. இந்த நிலையில் இப்படத்தின் ஷுட்டிங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருவதைக் காணலாம்.





Advertisement

Advertisement

Advertisement