பிக்பாஸ் சீசன் 8 இன் grand finale இன்று நடைபெறவுள்ளது.அதற்கான சூட்டிங் வேலைகள் அனைத்தும் முடிவடைந்து முடிவுகள் ஒரு சில கசிந்த வண்ணம் உள்ளது இன்று 6.00 விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள இந்த நிகழ்ச்சியின் 4 ஆவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
நிமிடத்திற்கு நிமிடம் சுவாரஸ்யத்தை ரசிகர்களுக்கு வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில் தற்போது இறுதி போட்டியாளர்கள் 5 பேரும் தமது விம்பத்துடன் உரையாடுவது போன்று இந்த ப்ரோமோ எடுக்கப்பட்டுள்ளது.பவித்ரா ,ரயான் ,விஷால் ,முத்து ,சவுந்தர்யா ஆகியோர் தமது விம்பங்களுடன் மிகவும் அழகாக உரையாடியுள்ளனர்.
முதலில் முத்து "குமரா நீ உண்மையிலேயே ஏதோ ஒண்டு செஞ்சிடடா வாழ்த்துக்கள்டா " என கூறியுள்ளார்.அடுத்து பவித்ரா "நீ ஓட வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கு உனக்கானது உன்னை தேடி வந்துக்கிட்டே இருக்கும் " எனவும் அடுத்து சவுந்தர்யா "யாரு life ல உன்கூட வரலன்னாலுமே உன்னை தூக்கி விடுறதுக்கு நான் இருக்கன் " எனவும் அடுத்து விஷால் மற்றும் ரயான் "தன்னம்பிக்கையோட சேர்ந்து என்னோட விடாமுயற்சியும் எனக்கு கை கொடுத்துச்சு ,இன்னைக்கு தைரியமா உன் முன்னாடி நான் நின்னு பேசுறன்னா அதுக்கு இந்த வீடு தான் காரணம்"என கூறியுள்ளார்கள்.
105 நாட்கள் பல போராட்டங்களை சந்திச்சு இப்போ இறுதி போட்டியாளர்களாக வந்திருக்கும் 5 பேரில் யார் வெற்றியாளர் என்பதனை இன்னும் சில மணித்தியாலங்களுக்கு பொறுத்திருந்து பார்க்கலாம்
Listen News!