• Jan 19 2025

சைப் அலிகானை தாக்கியவர் எந்த நாட்டவர் தெரியுமா? அதிர்ச்சிமேல் அதிர்ச்சி தகவல்

Aathira / 3 hours ago

Advertisement

Listen News!

பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகர் சைப் அலிகான் வீட்டில் இடம் பெற்ற திருட்டு சம்பவம், அதன் பின்பு கத்திக்குத்துக்கு உள்ளான சைப் அலிகான் பற்றிய சம்பவங்கள் ஒட்டு மொத்த இந்திய திரையுலகிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன.

இந்த நிலையில், மும்பையில் சைப் அலிகானை கத்தியால் குத்தி தாக்கியவர் வங்கதேசத்தை சேர்ந்த முகமது ஷாரிபுல் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரை பிடிப்பதற்காக 100 காவலர்கள் கொண்ட 35 தனிப்படை அமைக்கப்பட்டு 72 மணி நேரங்களில் குற்றவாளியை கைது செய்துள்ளனர்.

d_i_a

அதாவது நடிகர் சைப் அலிகான் தனது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்களை தடுக்க முற்பட்ட போது, அவரை ஆறு இடங்களில் கத்தியால் குத்தி விட்டு குற்றவாளிகள் தப்பி ஓடினர். இதில் படுகாயம் அடைந்த சைப் அலிகான் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்.


மேலும் சைப் அலிகான் மருத்துவமனையில் இருந்ததற்கான இரண்டு நாள் செலவு மட்டும் 25 லட்சம் என கூறப்பட்டது. மேலும் சைப் அலிகான் குணமடைந்து அவருடைய மனைவி கரீனா கபூருடன் வீட்டிற்கு திரும்பிய வீடியோவும் இணையத்தில் வைரலாகி இருந்தது.

இவ்வாறான நிலையில் சைப் அலிகானை தாக்கிய குற்றவாளி வங்கதேசத்தை சேர்ந்தவர் எனவும் அவர் இந்தியாவில் சட்ட விரோதமாக நுழைந்துள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Advertisement

Advertisement