• Jan 19 2025

கோட்ல விஜய் ஓவர் ஆக்டிங்.. கொஞ்ச நாள்ல சன் டிவில படத்த போடுவாங்க..! ரசிகர் கதறல்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

இளையதளபதி விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வெளியாகும் திரைப்படம் தான் கோட். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். மங்காத்தாவை இயக்கிய வெங்கட் பிரபு விஜய் வைத்து முதன்முறையாக படம் தயாரிப்பதால் இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்பட்டது.

அது போலவே இந்த படத்தை பார்த்து ரசிகர்கள் அதிகமாக தமது பாசிட்டிவ் விமர்சனங்களை தான் தெரிவித்து வருகின்றார்கள். ஆனாலும் ஒரு சிலர் இந்த படத்தின் நீளம் அதிகமாக இருப்பது வெறுக்க தக்க ஒன்றாக காணப்படுவதாக  நெகட்டிவ் விமர்சனத்தை தெரிவித்து வருகின்றனர்.

கோட் படத்தில் அதிகமான முன்னணி நடிகர்கள் மீண்டும் கம்பேக்  கொடுத்துள்ளதோடு இந்த படத்தில் எஸ்கே, திரிஷா, தல என எழுதப்பட்ட சப்ரைஸ்கலை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார் வெங்கட் பிரபு.

இந்த நிலையில், இந்த படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் அளித்துள்ள பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.


அதாவது அவர் கூறுகையில், மங்காத்தா படத்திற்கு கால் தூசுக்கு  சமமாக காணப்படுகின்றது கோட் படம். மங்காத்தா படம் ரசிக்கக் கூடிய வகையில் இருக்கும் ஆரம்பம் முதல் இறுதி வரை அஜித்- அர்ஜுன் பக்கா வில்லன்களாகவே காணப்படுவார்கள்.

கோர் படத்தை விஜய் ரசிகர்களுக்கே பிடிக்காது. அவ்வளவு கொடூரமாக காணப்படுகின்றது. அதிலும் விஜய் ஓவர் ஆக்டிங் பண்ணுகின்றார். விஜய் நடித்த படங்களிலேயே இந்த படம் தான் ரொம்ப கேவலமாக இருக்கின்றது. கொஞ்ச நாள் பொறுங்க இந்த படத்தை சன் டிவியில் போடுவார்கள் என்று தனது கருத்தை கூறியுள்ளார். தற்பொழுது இவர் கூறிய இந்த விமர்சனம் சமூக வலைத்தளத்தை வருகின்றது.

Advertisement

Advertisement