• Oct 09 2026

சொல்லாமல் கொடுத்த சப்ரைஸ்! விஜய்யுடன் நடனமாடிய திரிஷா! வெளிவந்த புகைப்படங்கள், இதோ

shali / 2 years ago

Advertisement

Listen News!

தளபதி விஜய்யுடன் நடிகை திரிஷா கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். அதை தொடர்ந்து 13 ஆண்டுகளுக்கு பின் இருவரும் இணைந்து நடித்த படம் லியோ.


அதற்கும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து. GOAT படத்திலும் விஜய்யுடன் இணைந்து திரிஷா நடித்துள்ளார் என ஏற்கனவே தகவல் வெளிவந்தது. ஆனால், ஜோடியாக அல்ல ஒரே ஒரு பாடலுக்கு மட்டுமே திரிஷா நடனமாடியுள்ளார் என கூறப்பட்டது.


இறுதிவரை படக்குழு இதனை வெளியே சொல்லாமல் இருந்த நிலையில், நேற்று திரையரங்கில் மட்ட பாடலில் திரிஷா என்ட்ரி கொடுத்து திரையரங்கை தெறிக்கவிட்டார்.


விஜய் - திரிஷா இணைந்து ஆடிய நடனம் பட்டையை கிளப்பியது. இந்த நிலையில், GOAT படத்தின் மட்ட பாடல் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட திரிஷாவின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. 

Advertisement

Advertisement