• Sep 19 2024

வாயை பிளந்த கோலிவுட்..! அசுர வேகத்தில் எகிறும் முதல் நாள் வசூல்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் தற்போது உலகளவில் வெளியாகி ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி போடப்பட்டுள்ளது. அதேபோல கேரளாவில் 3.50க்கு லியோ படத்தின் முதல் காட்சி பெருமளவில் திரையிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் LCU இல்  இணைந்துள்ளது. 

'லியோ' படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், கெளதம் மேனன், பிரியா ஆனந்த், அர்ஜுன், சாண்டி, மிஸ்கின், ஜார்ஜ் மரியம் உள்ளிட்ட பல வலிமையான நடிகர்கள் நடித்துள்ளனர். 



இவ்வாறான நிலையில், நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள லியோ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் விபரம் தற்போது வெளியாகி இருக்கிறது.

அதன்படி, நடிகர் விஜயின் லியோ திரைப்படம். முதல் நாளில் மட்டும் 188 கோடி ரூபாயை வசூல் தெரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், நாளை காலை முதல் நாளின் முழு விபரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதுவரை 188 கோடி ரூபாய்க்கான டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன.



எனவே,  லியோ திரைப்படம் முதல் நாளிலேயே நிச்சயமாக 200 கோடி என்ற இலக்கை எட்டும் என கணிக்க முடிகிறது.அதேவேளை, முன் பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளின் எண்ணிக்கையின்  அடிப்படையில் தான் இந்த முதல் நாள் வசூல் விபரம் வெளியாகி உள்ளன.

அதன்படி, உலகளவில் 188 கோடி ரூபாய்க்கு லியோ படத்தின் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதோடு, இன்றைய நாள் முடிவில் கண்டிப்பாக 200 கோடியை தாண்டி விடுமமென பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement