• May 18 2024

லியோ திரைப்படம் எல்சியு தானாம்- கேமியோ ரேலில் நடித்த அந்த நடிகர் யார் தெரியுமா?- செம கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

stella / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர், கெளதம் மேனன், ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மாஸ்டரை தொடர்ந்து விஜய் - லோகேஷ் - அனிருத் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ள லியோ, தரமான சம்பவமாக அமைந்துள்ளது. முக்கியமாக இந்தப் படம் லோகேஷின் சினிமாட்டிக் யூனிவர்ஸில் இணைந்துள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தளபதி விஜய் வேற லெவலில் வைப் காட்டியுள்ளதாக கூறிய ரசிகர்கள், அவரது டான்ஸ் செம்ம மாஸ் எனவும் கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.


லியோ ரிலீசுக்கு முன்னர் பெரும்பாலானோர் எழுப்பியது இப்படம் எல்சியு-வில் உள்ளதா? இல்லையா என்கிற கேள்வி தான். மேலும் படத்தின் முதல் காட்சியைப் பார்த்த ரசிகர்கள் லியோ எல்சியூ தான் என்று தெரிவித்திருந்தனர்.இதனால்  யார் கேமியோ ரோலில் நடித்திருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு தான் அதிகமாக இருந்தது.

அதன்படி இதில் ஒரு காட்சியில் மட்டும் நடிகர் ஜார்ஜ் மரியான் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். இவர் கைதி படத்தில் நடித்தவர் ஆவார்.அதேபோல் கமல்ஹாசனை கேமியோ ரோலில் நடிக்க வைக்காமல், விக்ரம் படத்தில் கார்த்தியின் முகத்தை காட்டாமல் அவரின் வாய்ஸ் ஓவரை பயன்படுத்தியது போல் கமல்ஹாசனின் வாய்ஸ் ஓவரை மட்டும் பயன்படுத்தி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். 


அதுவும் கிளைமாக்ஸில் விஜய்யிடம், கமல்ஹாசன் போனில் கலந்துரையாடும் படியான காட்சி அமைத்து லியோவையும் லோகேஷ் கனகராஜ் எல்சியுவில் இணைத்திருக்கிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement