• May 13 2024

லியோ படத்தை கழுவி ஊற்ற ஆரம்பித்த ப்ளூ சட்டை மாறன்- மோசமாக விமர்சித்து வரும் ரசிகர்கள்

stella / 6 months ago

Advertisement

Listen News!

 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பான் இந்தியத் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் லியோ. இந்தப் படத்தின் அதிகாலை 4 மணி ஷோ, தமிழ்நாட்டைத் தவிர மற்ற மாநிலங்களில் திரையிடப்பட்டது.அதன்படி, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகாவின் பெங்களூரு, மும்பை போன்ற பல ஏரியாக்களில் லியோ FDFS அதிகாலை 4 மணிக்கு தொடங்கியது. 

இந்நிலையில், லியோ ரிலீஸை முன்னிட்டு திரையரங்குகளின் முன்பு விஜய்யின் கட் அவுட்டை ரசிகர்கள் வைத்துள்ளனர். அதுமட்டும் இல்லாமல் விதவிதமான கேப்ஷன்களுடன் போஸ்டர்களும் அடித்திருந்தனர். இந்நிலையில் ஆந்திராவின் ஒரு பகுதியில், லியோ படத்திற்காக வைக்கப்பட்ட விஜய் கட்அவுட் வைரலாகி வருகிறது.


 அதில் அவரது போஸ்டர் அருகே பான் இந்தியா ஹீரோ பிரபாஸும் செம்ம மாஸாக போஸ் கொடுத்துள்ளார். லியோ வெற்றிக்காக விஜய்க்கு மாஸ் கொடுத்துள்ளனர் பிரபாஸ் ரசிகர்கள். இதனிடையே லோகேஷ் விரைவில் பிரபாஸுடன் இணையவுள்ளார் என்றும் கூறப்படுகின்றது. லியோவை தொடர்ந்து தலைவர் 171, கைதி 2, விக்ரம் 2, இரும்பு கை மாயாவி, ரோலக்ஸ் என லோகேஷின் லைன் அப் பிஸியாகவே உள்ளது.

 அதன்பின்னர் தான் பிரபாஸின் படத்தை இயக்கவுள்ளாராம் லோகேஷ். இதனால், அவர் இயக்கத்தில் வெளியான லியோவை பிரபாஸ் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தான் லியோ படத்தின் வெற்றிக்காக 'பிரபாஸ் - விஜய் ஃபேன்ஸ்' என ரசிகர்கள் கட் அவுட் வைத்துள்ளனர்.

இதனைப் பார்த்த ப்ளூ சட்டை மாறன், 'தல தளபதி சலூன்' என தனது ட்ரோல் கணக்கைத் தொடங்கியுள்ளார். 


பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் வரும் தல தளபதி காமெடியை வைத்து பஞ்ச் கொடுத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். வழக்கமாக படத்தின் விமர்சனத்தில் பங்கம் செய்யும் ப்ளூ சட்டை, லியோ படத்தை விஜய்யின் கட்அவுட்டில் இருந்தே தொடங்கிவிட்டார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement