பிரபல நடிகையாக திகழ்ந்து வரும் கீர்த்தி சுரேஷ், தனது 15 வருட காதலரான ஆண்டனியை இன்றைய தினம் திருமணம் செய்ய உள்ளார். இவர்களுடைய திருமணம் கோவாவில் நடைபெற உள்ளது.
கீர்த்தி சுரேஷின் திருமணத்தில் அவருக்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளனர் . இவர்களுடைய திருமணம் காலையில் ஹிந்து முறைப்படியும் மாலையில் கிறிஸ்தவ முறைப்படியும் நடைபெற உள்ளதாம்.
d_i_a
இந்த நிலையில், திருமண பந்தத்தில் இணைய உள்ள கீர்த்தி சுரேஷின் திருமண கொண்டாட்டங்கள் வெகுவாக ஆரம்பமாகியுள்ளன. அதற்கு தயாராகி வரும் கீர்த்தி சுரேஷின் அழகிய புகைப்படமும், மண்டபத்தின் புகைப்படமும் வெளியாகி வைரலாகி உள்ளன.
கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த போட்டோ வெட்டிங் போட்டோ ஷுட்டுக்கான மேக்கிங் புகைப்படம் போலவே தெரிகிறது. இதனால் இன்றைய தினம் தனது கணவருடன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்களையும் கீர்த்தி சுரேஷ் வெளியிடுவார் என்ற ஆவலுடன் ரசிகர்கள் உள்ளனர்.
இதேவேளை, இன்றைய தினம் தனது பிறந்த நாளை கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த தினத்தின் போது கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொள்வதும் ரசிகர்களுக்கு உற்சாகமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!