• Dec 08 2023

கேரளாவில் அரசியல் பக்கம் சாயும் கீர்த்தி சுரேஷ் - தனது நடிப்புக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா? ரசிகர்கள் குமுறல்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

கேரளாவில் எம்.எல்.ஏ அன்வர் சதாத் நடத்திய  அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் வைரலாகியுள்ளது. இதை அவதானித்த ரசிகர்கள் இவரும் அரசியலில் குதித்து விட்டாரா என கேள்வியெழுப்பி வருகின்றனர்.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் மலையாள திரையுலகில் குழந்தையாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக உருவெடுத்தார்.

தமிழில் அறிமுகமான  இவருக்கு 'ரஜினி முருகன்' படம் தாறுமாறு ஹிட்டடித்தது. அதை தொடர்ந்து பைரவா, சாமி, ரெமோ போன்ற படங்களில் நடித்தார்.


அத்துடன், தனக்கு எதிரான விமர்சனங்களை தகர்க்கும் விதத்தில் இவர் நடித்த மகாநடி கதாபாத்திரம் கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருதை பெற்று தந்தது. இதை தொடர்ந்து பெரும்பாலும் கதாநாயகிக்கு முக்கியத்தும் கொடுக்கும் படங்களையும் தரமான  கதைகளையும் தேர்வுசெய்து நடித்து வருகிறார். 

இந்நிலையில் அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கீர்த்தி கூறுகையில்,  'அலைவ்' என்பது கேரளாவின் ஆலுவாவில் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்தும், எம்.எல்.ஏ அன்வர் சதாத்தால் உயிர்ப்பிக்கப்பட்ட ஒரு லட்சியத் திட்டமாகும். இத்திட்டத்தின் முன்முயற்சியாக, அனைத்து பாடத்திட்டங்களிலும் பரீட்சைகளில் யூஃயு1 பெற்ற 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். பல்வேறு இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளில் ரேங்க் பெற்றவர்கள் மற்றும் நூற்றுக்கு நூறு தேர்ச்சி பெற்ற பள்ளிகளும் கவுரவிக்கப்பட்டனர். இந்த மதிப்புமிக்க நிகழ்வின் ஒரு பகுதியாக இருந்ததில் நான் பெருமை அடைகிறேன். வந்த அற்புதமான மாணவர்களுடன் உரையாடிஇ வரும் தலைமுறையிலிருந்து உலகம் இன்னும் பல அதிசயங்களைக் காணும் என்று எனக்கு உறுதியளித்தார்' என கூறியுள்ளார்'.

Advertisement

Advertisement

Advertisement