• Jul 12 2025

முகத்தில் சிரிப்பு..கையில் ரோஜா..! கீர்த்தி ஷெட்டியின் ட்ரெண்டிங் போட்டோஷூட்...!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் இதயத்தைக் கவர்ந்த நடிகை கீர்த்தி ஷெட்டி, தற்போது மீண்டும் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்படும் பிரமுகராக மாறியுள்ளார். காரணம், அவரின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள். இந்தப் புகைப்படங்களில் ரோஜா பூவுடன் கியூட்டாகச் சிரித்தபடி இருக்கின்றார் கீர்த்தி ஷெட்டி.


கீர்த்தி ஷெட்டி, தனது திரைப் பயணத்தை தெலுங்குத் திரைப்படம் ‘உப்பேனா’ மூலம் தொடங்கினார். அந்த படம் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தி வாரியர், மனமே மற்றும் வா வாத்தியார் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.


இந்தத் திரை சாதனைகள் அனைத்திற்கும் மத்தியில், இன்ஸ்டாகிராமில் தற்போது கீர்த்தி ஷெட்டி வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன. அந்தப் புகைப்படங்களில், ஒரு சிவப்பு ரோஜாப் பூவை கையில் வைத்துக் கொண்டு மெல்லிய சிரிப்புடன் கீர்த்தி காணப்படுகின்றார். 


இந்த புகைப்படங்கள் வெளியான சில மணி நேரத்திற்குள் இன்ஸ்டாவில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்கினைப் பெற்றுள்ளது. அத்துடன் இதனைப் பார்த்த ரசிகர்கள் " கீர்த்தி லுக் செம்ம கியூட்..!" என்று கமெண்ட்ஸினையும் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement