• Feb 01 2026

கீர்த்தி சுரேஷின் 2 ஹீரோக்களுக்கு குழந்தை.. ஒருவர் சிவகார்த்திகேயன்.. இன்னொருவர் யார் தெரியுமா?

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்த இரண்டு பிரபல ஹீரோக்களுக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில் அதில் ஒருவர் சிவகார்த்திகேயன் என்ற நிலையில் இன்னொருவர் யார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

’ரஜினி முருகன்’ மற்றும் ’ரெமோ’ ஆகிய படங்களில் சிவகார்த்திகேயன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் ஜோடியாக நடித்த நிலையில் நேற்று சிவக்கார்த்திகேயன் தனது சமூக வலைதளத்தில் தனக்கு ஆண் குழந்தை பிறந்ததாக அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷின் இன்னொரு ஹீரோவான வருண் தவானுக்கு நேற்று குழந்தை பிறந்துள்ளது. அவர் தனது சமூக வலைத்தளத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

நடிகர் வருண் தவான் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் ’தெறி’ படத்தின் ரீமேக் படமான ‘பேபி ஜான்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வருண் தவான் தனது மனைவி நடாஷா கடந்த சில மாதங்களுக்கு முன் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ள நிலையில் நேற்று தனக்கு மகள் பிறந்ததாக அறிவித்துள்ளதை அடுத்து அவரது நண்பர்களும் திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கீர்த்தி சுரேஷின் ஹீரோக்களுக்கு அடுத்தடுத்த நாட்களில் குழந்தை பிறந்துள்ளது ஆச்சரிய ஒற்றுமையாக கருதப்படுகிறது.

Advertisement

Advertisement