• May 20 2024

லேடி சூப்பர் ஸ்டார் புதிய படத்தின் நியூ அப்டேட்... நயன்தாராவுடன் நடிக்க இருக்கும் கயல் சீரியல் நடிகை...

subiththira / 7 months ago

Advertisement

Listen News!

லேடி சூப்பர் ஸ்டார்  நயன்தாரா நடித்து வரும் புதிய படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. கயல் சீரியல் நடிகையும் இப்படத்தில் கமிட்டாகியுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது. 


இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. நடிகை நயன்தாரா நடிக்கும் படத்திற்கு இப்படியொரு தலைப்பா என கேள்வி எழுந்தாலும், கதைக்கான தலைப்பாக தான் இது இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.


இத்திரைப்படத்தில் பல பிரபலங்கள்  இணைந்துள்ளனர். அத்தோடு  சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் தேவி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா ரவிச்சந்திரன் தான் இப்படத்தில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


லோக்கல் தொலைக்காட்சியில் வீஜேவாக பணிபுரிந்து வந்த அவருக்கு கயல் தொடர் நல்லதொரு ஊடக வெளிச்சத்தை பெற்றுத்தந்துள்ளது.  தற்போது ஐஸ்வர்யாவுக்கென சோஷியல் மீடியாவில் தனி ரசிகர் கூட்டமே உள்ளது.


இந்நிலையில், அவருக்கு தற்போது சினிமா வாய்ப்பு கிடைத்துள்ளது. ஐஸ்வர்யா தற்போது 'மண்ணாங்கட்டி' என்ற படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் சேர்ந்து நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஐஸ்வர்யாவின் இந்த புதிய பயணத்திற்கு ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்ப்பும் வாழ்த்தும் கிடைத்துள்ளது.



  

Advertisement

Advertisement