• Nov 23 2025

கட்டப்பா கம்பேக்.. சற்றும் எதிர்பார்க்காத வகையில் ரீ-ரிலீஸில் வசூலைக் குவித்த "பாகுபலி"..!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

திரையுலக ரசிகர்கள் மனதில் என்றென்றும் நீங்காத திரைப்படம் ஒன்று என்றால் அது நிச்சயமாக “பாகுபலி” தான். இந்திய சினிமாவின் வரலாற்றை புதிய பாதையில் கொண்டு சென்ற அந்த படத்தின் மகிமை இன்றும் குறைந்ததில்லை. இதற்குப் பிறகு பல பெரிய படங்கள் வெளிவந்தாலும், பாகுபலி ரசிகர்களின் மனதில் பிடித்த இடத்தை யாராலும் பிடிக்க முடியவில்லை. 


2015ஆம் ஆண்டு வெளிவந்த பாகுபலி திரைப்படம், இந்திய சினிமாவின் பெருமையாக மாறியிருந்தது. அதன் கதைக்களம், காட்சியமைப்பு, தொழில்நுட்ப தரம், நடிப்பு என அனைத்தும் ஒரு புதிய தரத்தை உருவாக்கியது. அதைத் தொடர்ந்து 2017ஆம் ஆண்டு வெளிவந்த பாகுபலி 2 திரைப்படம், அந்த வெற்றியை பல மடங்கு உயர்த்தியது.

இந்த மாபெரும் வரலாற்று காவியத்தை இயக்கியவர், இந்தியாவின் பெருமைமிக்க இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி. சினிமா உலகில் அவர் உருவாக்கிய கற்பனை உலகம், ரசிகர்களை ஒரு புதுமையான சினிமா அனுபவத்திற்குள் அழைத்துச் சென்றது.


பிரபாஸ் நடித்த பாகுபலி கதாபாத்திரம், ரசிகர்களிடையே தெய்வீக நிலையைப் பெற்றது. ராணா டகுபதி நடித்த பால்லாலதேவன், அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்ற நடிகர்கள் தங்கள் கலை திறமையால் அந்த உலகத்தை உயிர்ப்பித்தனர்.

திரையுலகில் தற்போது பழைய படங்களை மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யும் போக்கு உருவாகியுள்ளது. அந்த வகையில், பாகுபலியின் இரண்டு பாகங்களையும் இணைத்து நேற்று ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. 

இந்நிலையில் பாகுபலி ரீ-ரிலீஸின் முதல் நாள் வசூல் கணக்குகள் தற்போது வெளியாகியுள்ளன. கிடைத்த தகவல்களின் படி, உலகளவில் ரூ.25 கோடியை கடந்த வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம், ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட படங்களில் முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை பாகுபலி படைத்துள்ளது.

Advertisement

Advertisement