• Jun 07 2026

கருணாஸ் சார் கால் பண்ணி பேசினார்! ஆனாலும் அவர் அதை செய்யல?மீண்டும் சர்ச்சையில் கென்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார் கென் கருணாஸ். இவர் தானே இயக்கி நடித்த படம் தான் “யூத்”. படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இளைஞர்களின் வாழ்க்கை, காதல், நட்பு மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனாலேயே இந்த படம் இளைஞர்கள் மத்தியில் பேசுபொருளாக உள்ளது.

எனினும், சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற “நான் ஆசைப்பட்ட பொண்ணு பேரு மோனிஷா” என்ற பாடல் எனக்கு சொந்தமானது என்றும், என்னுடைய பாடலை கென் கருணாஸ் பயன்படுத்தியுள்ளார் என்றும் கானா பாடகர் தினேஷ் குற்றம் சாட்டியிருந்தார். இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து, இதற்கு பதிலளித்த கென் கருணாஸ், அதற்கு உரிய அனுமதி பெற்று தான் பாடலை பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளார். ஆனாலும், கானா பாடகர் தினேஷ் தன்னிடம் எந்த அனுமதியும் பெறவில்லை என்றும், அந்த பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.


இந்த நிலையில், பாடகர் தினேஷின் மற்றொரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில், “கருணாஸ் சார் கால் பண்ணி பேசினார். ஆனால் அவர் என்னுடன் நேரடியாக பேசவில்லை, என் வக்கீலிடம் தான் பேசினார். பாடலுக்கான அனைத்து உரிமைகளும் பெற்றதாக அவர் கூறினார்.

ஆனால் அந்த பாடலின் உண்மையான உரிமையாளர் நான் தான். அதை உருவாக்க எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்பது மக்களுக்கு தெரியும். அந்த பாடலின் மூலம் தான் நான் பிரபலமானேன். இருந்தும், என்னிடம் நேரடியாக பேசவில்லை” என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement