• May 18 2026

மயங்கி விழுந்த கோமதி.. நாடகமென அலட்சியப்படுத்தும் பாண்டியன்.! டுடே எபிசொட்

shali / 1 month ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, அரசி காந்திமதியைப் பார்த்து நீங்க என்னையும் உங்க பேரனையும் சேர்த்து வைக்க முயற்சி பண்ணுறீங்களா என்று கேட்கிறார். மேலும் எனக்கு அவர் கிட்ட பேசுறதுக்கு ஒன்னுமே இல்ல என்கிறார் அரசி. அதனை அடுத்து காந்திமதி அரசியைப் பார்த்து நீ அவனைக் கல்யாணம் பண்ணல என்றால் வேற யாரு அவனைக் கல்யாணம் பண்ணுவாங்க என்று அரசியைப் பார்த்துக் கேட்கிறார்.

அதைக் கேட்ட குமார் இதையெல்லாம் கேட்கத் தான் என்னை வரச்சொன்னீங்களா என்று கேட்கிறார். மறுபக்கம் கோமதி புளியை எடுக்கிறேன் என்று கதிரைக்கு மேல ஏறி மயங்கி கீழே விழுகிறார். அப்ப கோமதி கூப்பிட்ட சத்தத்தைக் கேட்ட பாண்டியன் தினமும் நாடகம் போடுறதே வேலையா போய்ச்சு என்று சொல்லிட்டு அங்கிருந்து கிளம்புறார்.


பின் வீட்டிற்கு வந்த சரவணன் கோமதி கீழே விழுந்து கிடக்கிறதைப் பார்த்து பதறுறார். அதனை அடுத்து பழனி குமாரோட வண்டியில கோமதியை ஹாஸ்பிடல் கூட்டிக் கொண்டு போறார். பின் சரவணன் கடைக்குப் போய் பாண்டியன் கிட்ட அம்மாவுக்கு உடம்பு சரியில்ல ஹாஸ்பிடலில சேத்திருக்கு என்று சொல்ல, பாண்டியன் ஷாக் ஆகுறார்.

மேலும், அம்மாவுக்கு இன்னும் நினைவு திரும்பல என்று சரவணன் சொல்ல, பாண்டியன் உடனே ஹாஸ்பிடல் போகலாம் என்று சொல்லுறார். பின் டாக்டர் ஹாஸ்பிடலில அவங்களை ஒருத்தரும் கவனிக்கலயா என்று சொல்லிப் பேசுறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement