• Apr 26 2024

சிவகார்த்திகேயனிடம் மரண அடி வாங்கிய கார்த்தி... 4ஆவது நாள் வசூல் வெறும் இத்தனை கோடி தானா...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

கார்த்தி நடிப்பில் மித்ரன் இயக்கத்தில் உருவான 'சர்தார்' திரைப்படம் ஆனது தீபாவளி விருந்தாக கடந்த 21-ஆம் தேதி திரையரங்குளில் களமிறங்கியுள்ளது. ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜிவி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கின்றார். 


இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து இப்படத்தில் ரஜிஷா விஜயன், சங்கி பாண்டே, லைலா, முரளி சர்மா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. அதுமட்டுமல்லாது திரையிட்ட இடமெல்லாம் படத்திற்கு மிகப்பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.


முதல் நாளை விட படத்திற்கு அடுத்தடுத்த நாட்களில் மிகப்பெரும் வசூல் வந்துள்ளது.அந்தவகையில் 4 நாட்களில் தமிழகத்தில் மட்டுமே இப்படம் ரூ 20 கோடி வரை வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இப்படம் வெளியான அதே தினத்தன்று சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' திரைப்படமும் வெளியாகி இருந்தது. ஆனால் அப்படம் 4 நாட்கள் முடிவில் தமிழகத்தில் மட்டும் 25 கோடியை வசூலித்து இருக்கின்றது.


இதனால் சர்தார் திரைப்படம் ஆனது வசூலில் சற்று சறுக்கியுள்ளமை தெளிவாகி இருக்கின்றது. 

Advertisement

Advertisement

Advertisement