• Sep 20 2024

பல மில்லியன் பார்வையாளர்களை கடந்த கார்த்தி படப் பாடல்...எது தெரியுமா?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

'பருத்தி வீரன்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வாரிசு நடிகர் கார்த்தி. இவர் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்து தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார். தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் சமீபத்தில் நடித்த படம் 'விருமன்'. இந்தப்படத்தை முத்தையா இயக்கி உள்ளதோடு சூர்யாவின் 2டி என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தில் நடிகர் கார்த்தியின் ஜோடியாக இயக்குநர் ஷங்கரின் மகளாகிய அதிதி நடித்து வருகின்றார். இவர்களுடன் இணைந்து பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தற்போது இப்படத்தின் படப்பிடிப்புக்கள் யாவும் முடிவு பெற்ற நிலையில் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. மேலும் ஆகஸ்ட் 31-ஆம் திகதி இப்படம் திரைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இந்தப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் பாடலாக "கஞ்சா பூ கண்ணால" லிரிக்கல் வீடியோவாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வெளியாகி இருந்தது. கருமாத்தூர் மணிமாறன் எழுதிய இந்தப்பாடலை யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து மெய் சிலிர்க்கும் வகையில் சித் ஸ்ரீராம் பாடியிருந்தார்.

இப்பாடல் வெளியான போதே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் இந்தப் பாடல் தற்போது 20 மில்லியன் பார்வையாளர்களை யூடியூப்பில் கடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement