• May 21 2024

'அசுரன்' படத்திற்காக எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா.. இயக்குநர் வெற்றிமாறன்

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் வெற்றிமாறன். இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த 'பொல்லாதவன்' என்ற படத்தை இயக்கி அதன் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். இவருடைய முதல் படமே மக்கள் மத்தியில் அதிகளவு வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்றுக் கொடுத்தது.

தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளிவந்த 'ஆடுகளம்' உள்ளிட்ட பல படங்களை இயக்கி வந்தார். இவருடைய படங்கள் அனைத்தும் வித்தியாசமான கதையம்சங்களை கொண்டு மிகவும் வித்தியாசமான முறையில் அமையப் பெற்றிருக்கின்றன.

அந்தவகையில் இவருடைய இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளிவந்த மற்றுமொரு திரைப்படம் 'அசுரன்'. தனுஷ் மற்றும் அவருக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் இணைந்து நடித்திருந்த இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

இந்நிலையில் இப்படத்திற்காக இயக்குநர் வெற்றிமாறன் அவர்கள் 5 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியுள்ளார் என்று தகவல் ஒன்று சமீபத்தில் வெளியாகியுள்ளது.

இத்தனை கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் இவர் தற்போது விஜய்சேதுபதி நடிப்பில் 'விடுதலை' என்ற படத்தை இயக்கி வருவதோடு, தொடர்ந்து சூர்யா நடிப்பில் 'வாடிவாசல்' என்ற படத்தையும் இயக்க உள்ளார். இவ்வாறு சினிமாவில் பிஸியாக திரைப்படங்களை இயக்கி வரும் இயக்குநராக வலம் வருகின்ற இவர் இனி வெளிவரவிருக்கின்ற படங்களுக்கு எத்தனை கோடி ரூபாய் வாங்கவுள்ளாரோ என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement