• Oct 13 2024

கபாலீஸ்வரன், கரிகாலன், கபிலன்... ரஜனி படத்தை பார்த்து பிள்ளைகளுக்கு பெயர் வைத்த ரசிகன்...

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் உலகெங்கிலும் இருக்கின்றனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தீவிரமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் தனது 3 பிள்ளைகளுக்குமே ரஜனியின் பெயரை வைத்த ரசிகரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 


தமிழ் சினிமாவின் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் தான் வேட்டையன். அத்துடன் லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்திலும் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார் ரஜினிகாந்த். வேட்டையன் திரைப்படம் எதிர்வரும் அக்டோபர் மாதம் பத்தாம் தேதி ரிலீஸ் ஆகும் என இதன் தயாரிப்பு நிறுவனமான லைகா அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. 


இந்நிலையில் நடிகர் ரஞ்சித் அவர்களிடம் ரஜனி ரசிகர் ஒருவர் "அண்ணே ரஞ்சித் அண்ணே என்னோட முதல் மகன் பேர் வந்து கபாலீஸ்வரனு வச்சேன் 2016ல கபாலி வந்துச்சி அப்போ பிறந்தவர், அடுத்து கரிகாலன் காலா படம் வந்தப்போ பிறந்தாரூ, அடுத்து சார்பட்டா பரம்பரை படம் வந்தப்போ பிறந்தவர் இவருக்கு கபிலன்னு பெயர் வச்சி இருக்கன் என்று சொல்லியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.  


Advertisement