• Jan 19 2025

ஒரு தோல்வி பத்தலயா? மறுபடியும் கங்கனாவிடம் சிக்கிய பிரபல இயக்குனர்..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் உருவானதலைவிஎன்ற திரைப்படத்தை இயக்குனர் விஜய் இயக்கிய நிலையில் அந்த படம் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான இந்த படத்தில் எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்த்சாமி, ஜெயலலிதா கேரக்டர் கங்கனா ரனாவத் நடித்திருந்த நிலையில் இந்த படம் பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

இதன்  படம் தோல்வி அடைந்ததால் இனி அடுத்ததாக கங்கனா ரனாவத் பக்கமே இயக்குனர் விஜய் செல்ல மாட்டார் என்று தான் எதிர்பார்க்கப்பட்டது. அதுமட்டுமின்றி கங்கனா ரனாவத்  நடிப்பில் உருவான 'சந்திரமுகி 2’ படமும் படுதோல்வி அடைந்ததை அடுத்து அவரும் இனி தமிழ் பக்கம் வரமாட்டார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகயிருக்கும் அடுத்த திரைப்படத்தில் நடிக்க கங்கனா ரனாவத்  ஒப்பந்தம் ஆகியுள்ளதை அடுத்து ஒரு தோல்வி பத்தலையா? மீண்டும் ஏன் கங்கனா ரனாவத்தை நோக்கி விஜய் சென்றுள்ளார் என்று கோலிவுட் திரையுலகினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.



மாதவன் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் கங்கனா ரனாவத் அவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் இந்த படமும் ஒரு பீரியட் படம் என்றும் இந்த படத்தை டிரைடண்ட் ஆர்ட்ஸ் மற்றும் அகிம்சா என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்திற்கு இசையமைக்க ஹாரிஸ் ஜெயராஜ் ஒப்பந்தம் ஆகியுள்ளார். பொதுவாக விஜய் படத்திற்கு ஜிவி பிரகாஷ் தான் இசையமைப்பாளர் என்று கூறப்பட்ட நிலையில்வனமகன்படத்திற்கு பின்னர் இரண்டாவது முறையாக மீண்டும் விஜய் படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இணைந்துள்ளார்.  

விஜய் இயக்கத்தில் சமீபத்தில் வெளியானமிஷின் சாப்ட்வேர் ஒன்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தையும் வெற்றிப்படமாக்கி தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர் பட்டியலில் இடம் எடுக்க வேண்டும் என்ற வெறியில் அவர் இந்த படத்தை இயக்கி வருவதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement