• Apr 17 2026

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மறைந்த நடிகர் விஜயகாந்தை நினைத்து உருகிய கமல்ஹாசன்! என்ன என்ன சொன்னார் தெரியுமா?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. ஆரம்பத்தில் மக்களின் எதிர்பார்ப்போடு பிரம்மாண்டமாக தொடங்கி தற்போது 90 நாட்களைக்  கடந்துள்ளது.

இந்த நிலையில், இன்றைய தினம் சனிக்கிழமை என்பதால் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கான காட்சிகள் முதலாவது ப்ரோமோவில் வெளியாகியுள்ளது.


அதில், தற்போது மறைந்த நடிகர் விஜயகாந்த் பற்றி உருகமாக பேசி உள்ளார் கமல்ஹாசன். அதன்படி அவர் கூறுகையில்,

என்னுடைய சோகத்தை..நம்மில் பலருடைய சோகத்தை... இந்த மேடையில் பகிர்ந்து கொள்வதை நான் கடமையாக நினைக்கிறேன். விஜயகாந்த் பற்றி நினைத்து கண்ணீர் சிந்துவதை விட அவரை பற்றி மகிழ்வதற்கு நிறைய விடயங்களை விட்டுச் சென்றுள்ளார்.

இது போல நாமும் வாழ முடியுமா? என்று நாமும் யோசித்தால் அவர் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தமும், நாம் வாழப்போகும் வாழ்க்கைக்கு அர்த்தமும் கிடைக்கும் என கூறியுள்ளார். 

Advertisement

Advertisement