• Oct 06 2024

ஜவானை தட்டி தூக்குமா கல்கி ! இன்றைய வசூலை போஸ்டருடன் வெளியிட்ட படக்குழு !

Nithushan / 3 months ago

Advertisement

Listen News!

சமீபத்தில் பல திரைப்படங்கள் வெளியாகி திரையிடப்பட்டிருந்தாலும் மிகவும் வைரலாக காணப்படுவது பிரபாஸ் நடித்துள்ள கல்கி திரைப்படம் ஆகும். அவ்வாறு குறித்த படம் செய்யும் வசூலை படக்குழு ஒவ்வொரு நாளும் வெளியிடுகின்றது. 


நாக் அஸ்வின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படம்   கல்கி 2898 AD ஆகும். இப்படத்தில் அமிதாப் பச்சன் , கமல்ஹாசன் , பிரபாஸ் , தீபிகா படுகோன் , திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


இந்த நிலையிலேயே குறித்த திரைப்படம் நேற்றைய தினம் 550 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்த நிலையில் தற்போது 7 நாட்களில் 700 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது. இதே 7 நாளில் 660 கோடி வசூல் செய்த ஜவான் திரைப்படத்தின் சாதனையை இது முறியடித்துள்ளது. 



Advertisement

Advertisement